வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 டிசம்பர் 2017 (20:20 IST)

விஷால் போட்டி குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்

ரஜினி, கமல், விஜய் போல் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிராமல் வெற்றியோ, தோல்வியோ களமிறங்க முடிவு செய்துவிட்ட விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பிரபலங்கள் கூறியதை பார்ப்போம்

இயக்குனர் அமீர்: சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில், நடிகர் விஷால் போட்டியிட காரணம் என்ன?

நடிகர் மோகன் ராமன்: மாற்றம் என்பது புத்துணர்ச்சியான மூச்சுக்காற்றில் இருந்துதான் வர வேண்டும். முன்வைத்த காலை பின்வைக்க வேண்டாம். என்னை போன்ற சீனியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு

இயக்குனர் சுந்தர் சி: அரசியலுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் இது

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'நடிகர் விஷால் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல அல்ல என்றும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விஷால் டெபாசிட்டை இழப்பார் என்றும், அரசியல் மட்டுமல்ல, விஷாலின் திரைப்பட வாழ்க்கையும் அஸ்தமிக்கும்

தமிழருவி மணியன்: 'விஷால் எல்லாம் ரஜினியாக முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலில் ஈடுபடுவது பற்றி ரஜினிகாந்த் விரைவில் முறையாக அரிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்: 'நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் வெற்றிகளை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது சினிமா டிக்கெட் வேறு, அரசியல் டிக்கெட் வேறு' என்று கூறியுள்ளார். மேலும் 'விஷால் திரைத்துறை சார்ந்த பிரச்னைகளை முதலில் தீர்க்கட்டும், அரசியலை பார்த்துக் கொள்ள தலைவர்கள் பலருடன் நாங்கள் இருக்கிறோம்'

தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்: 'எங்களுக்கும், திமுகவுக்கும் மட்டுமே போட்டி, விஷாலை நாங்கள் போட்டியாளராக கருதவில்லை'

சுமந்த் ராமன் (அரசியல் விமர்சகர்): சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்யும் நடிகர்கள் மத்தியில், விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது

பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்: ஆர்.கே.நகரில் விஷால் வெற்றி பெற மிகவும் பாடுபட வேண்டும் விஷாலுக்கு வெற்றி கிடைத்தால் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெரியவரும்