செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (19:46 IST)

ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுங்கள் - விஷாலுக்கு எதிராக களம் இறங்கிய சேரன்

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு இயக்குனர் சேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


 

ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிக விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. 
 
அந்த வரிசையில் இயக்குனர் அமீரைத் தொடர்ந்து, நடிகரும், இயக்குனருமான சேரன் விஷாலுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
முதல் களமிறங்கும்போதே பொய்முகத்தோடு நோக்கமேயின்றி யாரோடதூண்டுதலாலோ நிற்பதிலிருந்து வியாபாரகுதிரை ஆகிவிட்டார் விசால். நடிகர்சங்கத்தில் ஜெயித்தவுடன் முதலில் கலைஞர் அய்யாவை பார்த்து ஆசீர்வாதம் வாங்கிய விசால் நாளை MGR ஜெயலலிதா இருவரை வணங்கி மனுதாக்கல்.. ஏன்???
 
விசாலின் இந்தமுடிவால் நடுத்தெருவில்நிற்கபோவது தயாரிப்பாளகள். இனிவரும் எந்த அரசிடமிருந்தும் எதுவும் கிடைக்கப்போவதில்லை. மொத்தமாக தலையில்துண்டு. தயாரிப்பாளர் நலன்கருதி விசால் தலைவர்பதவியை ராஜினாமாசெய்துவிட்டு தேர்தலில் நிற்பதேநல்லது இல்லையெனில் நிறைய "அசோக்குமார்களை"சங்கம் சந்திக்கும்.
 
இதை கருத்தில் எடுக்காமல் அவர் மனுதாக்கல் செய்தால் அவர் தன்  தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் வரை சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன். என்னிடமுள்ள 75 கேள்விகளுக்கு பதில்சொல்லிவிட்டு போகட்டும். தேர்தலில் நிற்பதை தடுக்கமாட்டோம் ஆனால் எங்கள் பிணத்தின் மீது நடக்க அனுமதிக்க மாட்டோம்.
 
பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு வேண்டுகோள் விசாலின் சுயரூபம் வெளியில் வர உதவுங்கள். அவர் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கம் இரண்டிலும் சாதித்ததென்ன?. SAC போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் விசாலுக்கு அவர் தேர்தலில் நிற்பதால் என்ன என்ன பிரச்னைகள் சங்கம் சந்திக்கும் என்பதை எடுத்துச்சொல்லவேண்டும்.
 
விசால் தேர்தலில் நிற்பதை பற்றி எனக்கு எந்த கவலையுமில்லை. அது அவர் வியாபாரம். முடிவை மக்கள் சொல்லட்டும். என் கவலை என்தொழில் பாதுகாக்கப்படவேண்டும்.
 
என அவர் குறிப்பிட்டுள்ளர்.