Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திடீர் திருப்பம் ; விஷாலுக்கு கெடு விதித்த அதிகாரி - வேட்புமனு ஏற்க வாய்ப்பு?

Last Updated: வியாழன், 7 டிசம்பர் 2017 (17:34 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலின் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


 
விஷாலின் வேட்புமனு நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியால் நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த இருவரது கையெழுத்து போலி என்ற குற்றச்சாட்டு காரணமாக அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.  
 
இதற்கு விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது டிவிட்டர் பக்கம் மூலம் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபாதி அலுவலகத்திற்கும் அவர் புகார் அனுப்பினார். மேலும், நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து தனது வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யும் கோரிக்கை மனுவை கொடுத்தார். ஆனால், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சரிதான் என அவரும் கை விரித்து விட்டதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், விஷாலை முன் மொழிந்து பின் மறுத்த 2 நபர்களும் இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து, தாங்கள் மிரட்டப்பட்டது குறித்து விளக்கம் அளித்தால் விஷாலின் மனு மறுபரீசிலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
மனுவை வாபஸ் பெற இன்று மாலை 3 மணிதான் கெடு. எனவே, அதற்குள் அவர்கள் இருவரையும் விஷால் தரப்பு தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும். இல்லையேல், இறுதி பட்டியல் இன்று மாலை வெளியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விஷாலுக்கு மீண்டும் தேர்தல் அதிகாரி வாய்ப்பளித்துள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :