ஆர்.கே.நகரில் ஒரே வரிசையில் தீபா, விஷால்

RK Nagar
Last Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (19:48 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நடிகர் விஷாலும், தீபாவும் ஒரே வரிசையில் நின்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மனுதாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.
 
சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால் மற்றும் தீபா ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். விஐபி என்று பாராமல் விஷால் மனு தாக்கல் செய்ய வரிசையில்தான் வர வேண்டும் என மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விஷால் மற்றும் தீபா வரிசையில் நின்றுதான் மனு தாக்கல் செய்தனர்.
 
வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் நடிகர் விஷாலுக்கு 68ஆம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது. தீபாவுக்கு 91ஆம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :