திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:50 IST)

நடிகர் சங்க கட்டத்திற்கு விஜயகாந்த் பெயரா?. விஷால் சொன்ன பதில்.!!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு கேப்டன் விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இறுதி அஞ்சலியின் போது நடிகர் விஷால் பங்கேற்கவில்லை. அவர் வெளிநாட்டில் இருந்தவாறு கண்ணீருடன் மறைந்த விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நடிகர் விஷால், சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளிடம் பேசிய அவர், விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்கு என்னால் வர முடியாதது துரதிஷ்டவசமானது என்றார். 
 
வாழும்போதே கடவுளாக இருந்தவர் விஜயகாந்த் என புகழாரம் சூட்டிய விஷால், தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு கேப்டன் விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும் எனவும் கூறினார்.
 
விஜயகாந்த் பெயரை வைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்றும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 19ஆம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறும் எனவும் நடிகரும்,  சங்க பொதுச் செயலாளருமான விஷால் தெரிவித்தார்.