திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 13 மே 2016 (11:55 IST)

விஜயகாந்த் ஃபெயில்: தேமுதிகவினர் அதிர்ச்சி

தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார். உளுந்தூர்பேட்டையில் போட்டியிடும் அவர் தோல்வியை தழுவுவார் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


 
 
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தினமும் ஒரு கருத்துக்கணிப்பு வெளிவருகின்றன. தற்போது ஜூனியர் விகடன் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தோல்வியடைவார் என கூறப்பட்டுள்ளது.
 
விஜயகாந்துக்கு உளுந்தூர்பேட்டையில் 23 சதவீதம் ஆதரவும், அதிமுகவுக்கு 24 சதவீதமும் மேலும் விஜயகாந்த் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவார் என கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
 
தனது முதல் தேர்தலில் விருத்தசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றார். இரண்டாவது தேர்தலில் ரிஷ்வந்தியத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை மீண்டும் ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டால் தோல்வி அடையும் என்பதால் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார்.
 
கடந்த இரண்டு முறையும் விஜயகாந்துக்கு இல்லாத போட்டியை இந்த முறை உளுந்தூர்பேட்டையில் அரசியல் கட்சிகள் தொடுத்துள்ளனர். திமுக, அதிமுக, பாமக என கட்சிகள் பலமான வேட்பாளரையே விஜயகாந்துக்கு எதிராக களம் இறக்கியுள்ளனர்.
 
 
மற்ற வேட்பாளர்களில் பலமான போட்டி காரணமாக உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு தோல்வியே கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.