வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 11 அக்டோபர் 2017 (13:49 IST)

டெங்கு நோயாளிகளை கொன்றுவிடுவேன் என மிரட்டிய செவிலியர்கள்

அரியலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செலவியர்கள் இல்லை என குற்றம்சாட்டிய நோயாளிகளை ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என செவிலியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைத்து வருகிறது. நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செலவியர்கள் இல்லை என குற்றம்சாட்டி நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் ஊசி போடுவதாக கூறியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகளை தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து ஊசியை மாற்றி போட்டு டெங்குவால் இறந்துவிட்டீர்கள் என கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளனர். இதனால் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.