செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (22:24 IST)

குடும்பத்துடன் பிரச்சாரம் செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன
 
அந்த வகையில் விராலிமலை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் இம்முறை குடும்பத்தோடு பிரச்சாரம் செய்து வருகிறார் 
 
கடந்த முறை தனது மூத்த மகளை பிரச்சாரத்தில் இறங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த முறை தனது இளைய மகள் அனன்யாவின் கையில் மைக்கை கொடுத்து பிரச்சாரம் செய்து வருகிறாராம். இளைய மகளின் பிரச்சாரம் பொது மக்களை கவர்ந்து உள்ளதாகவும் அதனால் விஜயபாஸ்கர் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு எல்இடி டிவி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை போகப்போக தான் பார்க்க வேண்டும்