ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (10:58 IST)

பள்ளி மாணவியை காதலித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை

suicide
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பள்ளி மாணவியை காதலித்து நிலையில் அந்த காதல் தோல்வி அடைந்ததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தகவல் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தாம்பரம் மேற்கு பகுதி 32வது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக கருப்பசாமி என்பவர் இருந்து வந்தார். அவர் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கருப்பசாமி இன்று அதிகாலையில் மதுபோதையில் மாணவியுடன் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மன விரக்தி அடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva