1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 மார்ச் 2019 (15:04 IST)

இவரிடமிருந்து நடிப்பை கற்றுக்கொள்ளவேண்டும்! விஜய்சேதுபதியையே பிரமிக்க வைத்த மகாநடிகன்!

தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள்செல்வன் என பெருமையோடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்சேதுபதி. 


 
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன் யதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகரகளையும் தன் பக்கம் கவர்ந்திழுத்து பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக வலம் வருபவர் நடிகர்விஜய்சேதுபதி  . 
 
அப்பேற்பட்ட நடிகர் விஜய்சேதுபதி மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் தீவிர ரசிகர். இவர் சமீபத்தில் ஐதராபாத் சென்று அங்கு நடந்து வரும் மோகன்லாலின் குஞ்சாலி மரக்கார் படத்தின் ஷூட்டிங்கிற்கு விசிட் அடித்துள்ளார்.
 
அப்போது விஜய்சேதுபதியை வரவேற்ற படக்குழு அவரை கேரவனில் சென்று மோகன்லாலை சந்திக்குமாறு கூறி உள்ளனர்.ஆனால் விஜய்சேதுபதி அதை மறுத்து விட்டு படத்தின் இயக்குனர் பிரியதர்ஷனோடு இணைந்து மோகன்லால் நடிப்பதை பார்த்து ரசித்துளளார்.
 
அவரது நடிப்பை பார்த்து பிரம்மித்துபோன விஜய்சேதுபதி மோகன்லாலிடம் நடிப்பு கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ப்ரோடுக்ஷன் கண்ட்ரோலர் சித்து பணக்கால்,  "ஒரு மலையாள நடிகருக்கு பிற மொழி நடிகர்களும் ரசிகர்களாக இருப்பது பெருமை அடையக்கூடிய விஷயம்" என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.