Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காவிரிக்காக நடிகர்கள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் - வேல்முருகன் அதிரடி

Vel Murugan
Last Updated: புதன், 16 மே 2018 (18:41 IST)
காவிரிக்காக கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

 
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என முதலில் திமுக செயல் தலைவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதற்கு காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்று பெயரிடப்பட்டுள்ளன. இந்த கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜயகாந்த், தமிழிசை, டிடிவி தினகரன், வேல்முருகன், பாலகிருஷ்ணன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை அழைக்க உள்ள கமல்ஹாசன் கூறினார்.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:-
 
காவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன். நடிகர்கள் கூட்டத்தில் நான் பங்கேற்பதில்லை என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :