1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (08:46 IST)

19 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த ஷமி.. நண்பர் பகிர்ந்த தகவல்!

இந்திய கிரிக்கெட் கடந்த காலங்களில் கண்டுபிடித்த மிகச்சிறந்த வேகபந்து வீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர். நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அவர் மிகச்சிறப்பாக பந்துவீசி, இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் அதன் பிறகு காயம் காரணமாக அவர் இப்போது அணியில் இல்லை. விரைவில் அவர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் முகமது ஷமி, தன்னுடைய மனைவி  ஹாசின் ஷகானை விவாகரத்து செய்தார். அதற்கு முன்பாக ஷாகின் அவர் மேல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் மேட்ச் பிக்சிங் செய்தார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் வைத்தார். அந்த நேரத்தில் மனதளவில் பாதிக்கப்பட்ட ஷமி தன்னுடைய அபார்ட்மெண்ட்டில் 19 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தாராம்.

ஆனால் அவருடைய நண்பரும் குடும்பத்தினரும் சேர்ந்து அவரைத் தடுத்து சமாதானப்படுத்தியுள்ளனர். இதை அவருடைய நண்பர் உமேஷ் nகுமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் “ஒருநாள் மனமுடைந்த ஷமி, நான் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால் என் நாட்டுக்கு துரோகம் செய்தேன் என்று சொன்னதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என சொல்லிக்கொண்டே பால்கனி முனை வரை சென்றார். அப்பொது அவர் மனதில் என்ன நடந்திருக்கும் என நான் யூகிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.