செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (18:30 IST)

பொது நீச்சல் குளத்தில் சராசரியாக 72 லிட்டர் சிறுநீர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

பொதுநீச்சல் குளத்தில் சராசரியாக 72 லிட்டர் சிறுநீர் கலந்திருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
 
சிறு குழந்தைகளை தற்போது நீச்சல் பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நீச்சல் பயிற்சி பள்ளிகள் பெரிய நகரங்களில் நல்ல வருமானம் உள்ள தொழிலாக இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் நீச்சல் குளங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பொது நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் சராசரியாக 72 லிட்டர் சிறுநீர் கலந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. 
 
இந்த தகவல் நீச்சல் குளத்திற்கு அனுப்பும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran