திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (17:26 IST)

UPSC தேர்வு முடிவு வெளியீடு..! தமிழகத்தில் புவனேஷ் ராம் முதலிடம்....!

UPSC Exam
2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
 
2023ஆம் ஆண்டுக்கான நேர்காணல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் இடத்தை ஆதித்யா ஸ்ரீவத்சவா என்னும் தேர்வர் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அனிமேஷ் பிரதான் என்பவரும், மூன்றாம் இடத்தை டொனுரு அனன்யா ரெட்டி என்னும் மாணவியும் பெற்றுள்ளனர். 
 
தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான புவனேஷ் ராம் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். 

 
இவர் 2019 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 496ஆவது இடத்தைப் பெற்று இருந்தார். இந்த நிலையில் தற்போது அகில இந்திய அளவில் 41ஆவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.