1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (08:04 IST)

பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடுவதா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடுவதா? எனஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்  தெரிவித்துள்ளர்.
 
விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான  அணுகுமுறையை ஏற்க முடியாது என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 
விளையாட்டு என்பது இருநாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க  வேண்டும் என்று தெரிவித்தார். 
 
நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அவுட் ஆன போது ஜெய்ஸ்ரீராம் என ரசிகர்கள் கோஷம் எழுப்பிய  வீடியோவை பகிர்ந்து உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக  மைதானத்தில் ஆதிபுருஷ் படத்திலிருந்து ஜெய் ஸ்ரீராம் பாடல் மைதானத்தில் ஒளிபரப்பப்பட்டதால் அதுவரை அமைதியாக இருந்த ரசிகர்கள் திடீரென ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷங்களை எழுப்ப தொடங்கினர். அந்த நேரத்தில் சரியாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அவுட் ஆனதால் ஜெய்ஸ்ரீராம் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva