1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 அக்டோபர் 2023 (13:41 IST)

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு! அணிக்கு திரும்பிய கில்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடர் லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியைக் காண ஒரு லட்சம் இருக்கைகள் கொண்ட மைதானத்தின் அரங்கம் முழுவதும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.  டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத ஷுப்மன் கில் இன்றைய போட்டியில் அணியில் இணைந்துள்ளார்.

இந்திய அணி:-
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

பாகிஸ்தான் அணி:-
அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்