செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (20:46 IST)

இரு ஆண்கள் தகாத உறவு ... ஒருவர் பேசாததால் மற்றொருவர் தற்கொலை !

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் சூரப்பள்ளியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் டிப்ள்மோ இன்ஜினியராக  வேலை செய்துவருகிறார். இவரது உயிர்நண்பர் மணிகண்டன். இவர்கள் இருவரும் ஒன்றாக படித்துள்ளனர். அத்துடன் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஒசூரில் இருவருக்கும் வேலை கிடைக்க அதை உதறிவிட்டு, சொந்த ஊரிலேயே ஒருவர் கொத்தனாராகவும், மற்றொருவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தனர்.
 
இந்நிலையில் சிறுவயது முதல் பழக்கம் என்பதால் இருவரும் எப்போதும் போனில் பேசிக்கொண்டு, அதிக நெருக்கமாக பழகியுள்ளனர். 
 
இந்நிலையில் மகேஷிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். இதை எதிர்பார்க்காத மணிகண்டன் மணிகண்டன் இதுகுறித்து மகேஷிடன் கேட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் வாய்த்தகராறு ஆகவே இருவரும் பேச்சைக் குறைத்துக்கொண்டனர்.
 
இந்நிலையில் தன்னுயிர் நண்பன் தன்னுடன் பேசாததால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.