கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்: தோசை கரண்டியால் அடித்து கொன்ற தாய்!

Last Updated: புதன், 22 மே 2019 (12:20 IST)
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகனை தாயே தோசை கரண்டியால் அடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சோமசுந்திரத்தின் மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்கு கிஷோர் என்ற மகன் இருக்கிறான். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கிஷோர் தனது தாயுடன் இருந்து வந்துள்ளான். 
 
மகனுடன் அம்பத்தூரில் வசித்த வந்த புவனேஷ்வரிக்கு கார்த்திகேயன் என்பவருடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக கார்த்திகேயன், புவனேஷ்வரி ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. 
 
கார்த்திகேயன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் கிஷோர் பயந்து அழுது கொண்டிருப்பானாம். அப்போது அழக்கூடாது என கிஷோரை எப்போதும் அடித்து வந்துள்ளார் புவனேஷ்வரி. கடந்த 19 ஆம் தேதி கார்த்திகேயன் வீட்டிற்கு வந்த போதும் கிஷோர் அழுதுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த புவனேஷ்வரி கிஷோரை தோசை கரண்டியால் அடித்துள்ளார். 
அப்போது கிஷோருக்கு தொண்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே கிஷோர் உயிரிழந்தான். இதனால், உடனடியாக தனியார் அம்புலன்ஸ் மூலம் கிஷோரின் உடலை திருவாரூர் கொண்டு சென்றுள்ளனர்.
 
அப்போது புவனேஷ்வரியின் தாய் புஷ்பாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். திருவாரூர் வந்தடைந்ததும்தான் கிஷோர் உயிரிழந்துவிட்டான் என்பது புஷ்பாவிற்கு தெரியவந்துள்ளது. பேரனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புஷ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
உடனடியாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கிஷோரின் உடல், புவனேஷ்வரி மற்றும் கள்ளக்காதலன் கார்திகேயனை அம்பத்தூர் போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். அம்பத்தூர் போலீஸார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, புவனேஷ்வரி மற்றும் கார்த்திகேயனை கைது செய்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :