திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2022 (11:43 IST)

பிரியா மரண வழக்கில் 2 மருத்துவர்கள் முன்ஜாமீன் மனு தாக்கல்

anticipatory
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் குறித்த வழக்கில் தேடப்பட்டு வரும் மருத்துவர்கள் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா கால்பந்தாட்ட வீராங்கனை என்பதால் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யும் போது நேர்ந்த கவனக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தவறு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஒலித்து வரும் நிலையில் மருத்துவர்கள் திடீரென தலைமறைவானதாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் மீது கவனக்குறைவாக உயிரிழப்பு ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில் இரண்டு மருத்துவர்களும் தற்போது முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது
 
சென்னை ஐகோர்ட்டில் இரு மருத்துவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், ‘இந்த வழக்கில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் சாட்சிகளை கலைக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் இருவருக்கும் முன் ஜாமின் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva