ப்ரியாவின் பெற்றோரை சந்தித்த அண்ணாமலை: முக்கிய அறிவிப்பு
தவறான சிகிச்சையால் காலமான ப்ரியாவின் பெற்றோரை இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனை சென்ற பிரியாவுக்கு தவறான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ப்ரியாவின் பெற்றோரை சந்தித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மேலும் ப்ரியாவின் குடும்பத்தினருக்கு ஒரு வீடு வழங்கும் உத்தரவையும் வழங்கினார்
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்ச்ர் முருகன் ஆகியோர் ப்ரியாவின் பெற்றோரை சந்தித்து ப்ரியாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ப்ரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் கால்பந்தாட்ட பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும் என்று தெரிவித்தார்
மேலும் பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்துவோம் என்று கூறிய அண்ணாமலை பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார் என்று கூறினார். மேலும் அண்ணாமலை முதல் அமைச்சரின் சொந்த தொகுதியில் இந்த தவறு நடந்துள்ளது என்றும் நிர்வாக கோளாறு காரணமாகத் தான் ஒரு உயிர் பறிபோயுள்ளது என்றும் தெரிவித்தார்
Edited by Mahendran