1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (07:45 IST)

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவுதினத்தை முன்னிட்டு சுப. உதயகுமார் கைது

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கடந்த ஆண்டு நடந்ததை அடுத்து, போராட்டத்தின் 100வது நாளில் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வருடம் ஆவதை அடுத்து தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்றைய நினைவு தினத்தில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒருசிலரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்பேரில் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கோட்டாறு போலீஸ் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு சுப. உதயகுமார் இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்ததாகவும் இதனையடுத்தே அவரை போலீசார் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் போலீசாருக்கும் தமிழக அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.