வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 மே 2019 (07:42 IST)

கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது!

அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது மகாத்மா காந்தியை சுட்டு கொலை செய்த கோட்சே குறித்து கமல் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் ஒருசிலர், கோட்சேவை தியாகி என்றும் போற்றி பின்னர் கண்டனங்களை பெற்று வந்தனர். குறிப்பாக பாஜக பெண் சாமியார் பிரக்யாசிங், கோட்சே குறித்து கூறிய ஒரு கருத்து மன்னிக்க முடியாத தவறு என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இருப்பினும் கோட்சேவை இன்னும் ஒருசிலர் போற்றி புகழ்ந்து வருகின்றனர்
 
இந்த நிலையில் குஜராத் மாநில கோயில் ஒன்றில் கோட்சேவின் பிறந்ததினத்தை கொண்டாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து மகாசபா என்ற அமைப்பின் சார்பில் குஜராத் மாநிலத்தின் லிம்பயாத் என்ற இடத்தில் உள்ள சூரியமுகி ஹனுமான் கோயிலில் இந்த கொண்டாட்டம் நடந்துள்ளது. நாதுராம் கோட்சே பிறந்த நாளான கடந்த ஞாயிறு அன்று இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒருசிலர் கோட்சேவின் படத்தை வைத்து பூஜை செய்து கொண்டாடியதாக தெரிகிறது.
 
இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து சுதாரித்த குஜராத் போலீசார், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர்.