வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (13:38 IST)

சசிகலாவுக்கு இருக்க 0.1 சான்ஸ் கூட டிடிவி-க்கு இல்ல? வட போச்சே மொமண்ட்!!

சசிகலா அதிமுகவிற்குள் நுழைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என அமைச்சரின் சமீபத்திய பேட்டி மூலம் யூகிக்கப்படுகிறது. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹாரா சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனை காலம் அடுத்த ஆண்டில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று நன்னடத்தை அடிப்படையில் சசிகலா விடுதலையாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. 
 
தற்போது சசிகலா விரைவில் வெளியாவார் என்றாலும், அதற்கு பிறகான தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. சசிகலா விடுதலையான பின்பு மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என முன்பே அதிமுக பிரபலங்கள் சிலரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது அதை தலைமைதான் முடிவு செய்யும் என கூறியிருந்தார்கள். 
இந்நிலையில் தற்போது இதுகுறித்து நலப்பணி திட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் “சசிகலா விடுதலையாகி வந்த பிறகு அதிமுகவை வழிநடத்துவாரா என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். இவரது பதில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதாவது சசிகலா அதிமுகவை வழிநடத்துவது குறித்து தலைமை முடிவெடுக்க வேண்டும் என்றால் சசிகலா அதிமுகவிற்குள் நுழைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என புலப்படுகிறது. அப்படி விஸ்வாசத்தால் சசிகலா சேர்த்துக்கொள்ளப்பட்டாலும் டிடிவி தினகரன் அதிமுகவிற்கு மீண்டும் நுழைவது என்பது சாத்தியமற்றதே என கூறப்படுகிறது. 
 
ஏனெனில் டிடிவி தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கவே ஈபிஎஸ் - ஓபிஎஸ் சமரசத்திற்கு வந்தனர் எனவும் கூறப்பட்டுகிறது. டிடிவி தினகரனும் காத்திருக்காமல் கட்சி, தேர்தல் என பல அதிரடி நடவடிக்கைகளை கையிலெடுத்து வெற்றி தோல்விகளை கண்டுவிட்டார். 
 
ஆனால் ஒரு விஷயம் என்னவெனில் சசிகலா அதிமுக மீது அதிக பற்று கொண்டவர். எனவே அதிமுகவை தன் வசப்படுத்த அல்லது அதில் தன்னை இணைத்துக்கொள்ள விருப்படலாம் எனவும் தெரிகிறது.