1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (13:30 IST)

தினகரன் ஆதரவாளர்கள் 43 பேர் நீக்கம் - களை எடுக்கும் எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு

தினகரனின் ஆதரவாளர்களை பலரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை, சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதன் விளைவாக, கடந்த 25ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி, நாஞ்சில் சம்பத், சி.ஆர். சரஸ்வதி கலைராஜன், பார்த்திபன் உள்ளிட்ட சிலர் நீக்கப்பட்டனர்.  
 
இந்நிலையில், தினகரனின் ஆதரவாளர்கள் 45 பேர் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி ஓபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், மதுரை, திருச்சி, தஞ்சை, வேலூர், தேனி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக நீக்கியுள்ளனர். 
 
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து, தினகரனின் ஆதரவாளர்களை களை எடுக்கும் பணியில் எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.