வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (12:11 IST)

ஸ்லீப்பர் செல்களால் ஆடிப்போன தினகரன்: மீண்டு எழுவது கஷ்டம்தான்??

டிடிவி தினகரன் தனது கட்சிக்குள் இருக்கும் குறிப்பிட்ட 18 பேர் ஸ்லீப்பர் செல்களாக இருப்பார்களோ என ஆடிப்போய் இருக்கிறாராம்.
 
அமமுக தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் பேரிடியாக விழுந்தது. 
 
தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்த தேர்தல் முடிவு டிடிவி தினகரனை தமிழக மக்கள் அங்கீகரிக்க வில்லை என்பதையே காட்டுகிறது.  
 
இந்நிலையில் தங்க தமிழ்செல்வனின் வலது கரமான திகழ்ந்த அருண் குமார் தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் இருந்து விலகி துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துவிட்டார். 
 
அதோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 15 அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பனும் ஒருவர். 
இவ்வாறு தினகரன் இப்படி மோசமான தோல்வியை சந்தித்தது ஏன் என கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் டிடிவி தினகரன் விளக்கம் கேட்டுள்ளார். 
 
அதில், 18 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் எந்தவித பதிலும் அளிக்காமல் உள்ளார்களாம். இதனால் இவர்கள் தனது கட்சிக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்களோ என சந்தேகிக்கிறாராம். 
 
இவர்களின் உண்மை முகத்தை அறிந்து விரைவில் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று அக்கட்சி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது இருக்கும் நிலையில் தினகரன் தனது கட்சியை மீட்டு எடுத்து வருவது சவாலான ஒன்றாகத்தான் தெரிகிறது.