வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 ஜூன் 2019 (11:24 IST)

விழுந்தது அடுத்த விக்கெட்: காலியாகும் தினகரன் கூடாரம்!

தினகரனின் அமமுக கட்சியில் இருந்து தங்க தமிழ்செல்வனின் வலது கரமான விளங்கிய அருண் குமார் தனது ஆதர்வாளர்களுடன் விலகியுள்ளார். 
 
அமமுக தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் பேரிடியாக விழுந்தது. 
 
தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்த தேர்தல் முடிவு டிடிவி தினகரனை தமிழக மக்கள் அங்கீகரிக்க வில்லை என்பதையே காட்டுகிறது. 
 
இந்நிலையில் தங்க தமிழ்செல்வனின் வலது கரமான திகழ்ந்த அருண் குமார் தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் இருந்து விலகி துணை முதலமைச்சர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். 
ஏற்கனவே அமமுக தென்மண்டல பொறுப்பாளர் ஆர்.பி.ஆதித்தன், அதிமுகவில் இணைந்த நிலையில் அருண் குமாரின் இந்த முடிவு டிடிவி தினகரனை விட தங்க தமிழ்செல்வனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
ஆனால், விரைவில் தங்க தமிழ்ச்செல்வனும் அணி மாறக் கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அவர் சசிகலாவை சந்திக்கவும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.