ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (15:27 IST)

இடியமீன் ஆட்சியில் மாமியார் வீட்டிற்கு போவது யார்? தினகரன் பதிலடி!

டிடிவி தினகரன் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். தற்போது தமிழ்கத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பேச்சு தேர்தலை சுற்றியே உள்ளது. 
 
அந்த வகையில் சமீபத்தில் அமைச்சர் ஜெயகுமார், திருப்பரங்குன்றமும் தினகரனுக்கு கிடையாது, திருவாரூரும் கிடையாது, அவருக்கு திகார் சிறைதான் என்று கூறியிருக்கிறார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தினகரன் பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, ஜெயகுமார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் பரவாயில்லை. அவர்கள் அணையபோகும் தீபங்கள். அவ்வாறுதான் பேசுவார்கள். 
 
ஆட்சி போகப்போகிறதே என்ற விரக்தியில் எது வேண்டுமானாலும் பேசுவார்கள். தமிழகத்தில் நடக்கும் அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை காவல் துறையை வைத்து மிரட்டுவது, அவர்கள் மீது கடுமையான சட்ட விதிகளின்படி வழக்கு தொடர்வது என்று செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
 
தமிழகத்தில் இடியமீன் ஆட்சிபோல் அராஜக ஆட்சி நடக்கிறது. எந்த நிமிடம் ஆட்சி பறிபோகுமோ என்ற கோபத்தின் உச்சியில் இருப்பதால் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். மாமியார் வீட்டுக்கு யாரெல்லாம் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.