Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரனை கைது செய்ய வேண்டும்; சசிகலாவை வெளியே கொண்டு வர வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி!

தினகரனை கைது செய்ய வேண்டும்; சசிகலாவை வெளியே கொண்டு வர வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி!


Caston| Last Modified செவ்வாய், 14 நவம்பர் 2017 (11:09 IST)
சசிகலா குடும்பத்தை குறிவைத்து நடக்கும் வருமான வரித்துறை சோதனையை பற்றி தான் தமிழகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் காட்சி தலைவர்களும் இதனைப்பற்றி தான் பேசுகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் இது குறித்து அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

 
 
நாடே பரபரக்கும் வகையில் சசிகலா குடும்பத்தினை வளைத்து வளைத்து சோதனை செய்தது வருமான வரித்துறை. சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்கள், தினகரன், திவாகரன், விவேக், டாக்டர் சிவகுமார், கிருஷ்ணபிரியா என சசிகலா குடும்ப்பத்தினர் யாரும் தப்பவில்லை இந்த அதிரடி ரெய்டுக்கு.
 
குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்கள், உதவியாளர்கள், ஆதரவாளர்கள் என எல்லாரையும் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. ஐந்து நாட்கள் துருவி துருவி, அங்குலம் அங்குலமாக சோதனை செய்த வருமான வரித்துறை கட்டுக்கட்டாக ஆவணங்கள், சொத்துக்கள், பணம், தங்கம், வைரம் உள்ளிட்டவையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
 
மேலும் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் முடக்கிய வருமான வரித்துறை தற்போது சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களின் 15 வங்கி லாக்கர்களையும் சீல் வைத்து தனது அதிரடியை காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெய்டு குறித்து தினம் தினம் வரும் செய்திகளை பார்த்து பொதுமக்கள் மலைத்துப்போய் உள்ளனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்துக்கூறிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன், தினகரனை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் சசிகலாவை வெளியே கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :