திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (10:07 IST)

சசிகலா குடும்பத்தினரின் 15 வங்கி லாக்கர்களுக்கு சீல்: வருமான வரித்துறை அதிரடி!

சசிகலா குடும்பத்தினரின் 15 வங்கி லாக்கர்களுக்கு சீல்: வருமான வரித்துறை அதிரடி!

சசிகலா குடும்பத்தை குறிவைத்து அதிரடியாக சோதனை செய்த வருமான வரித்துறையினர், இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நடத்தி முடித்துள்ளனர். இதன் முடிவில் சசிகலா குடும்பத்தினரை சேர்ந்தவர்களின் 15 வங்கி லாக்கர்களை சீல் வைத்துள்ளனர்.


 
 
நாடே பரபரக்கும் வகையில் சசிகலா குடும்பத்தினை வளைத்து வளைத்து சோதனை செய்தது வருமான வரித்துறை. சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்கள், தினகரன், திவாகரன், விவேக், டாக்டர் சிவகுமார், கிருஷ்ணபிரியா என சசிகலா குடும்ப்பத்தினர் யாரும் தப்பவில்லை இந்த அதிரடி ரெய்டுக்கு.
 
குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்கள், உதவியாளர்கள், ஆதரவாளர்கள் என எல்லாரையும் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. ஐந்து நாட்கள் துருவி துருவி, அங்குலம் அங்குலமாக சோதனை செய்த வருமான வரித்துறை கட்டுக்கட்டாக ஆவணங்கள், சொத்துக்கள், பணம், தங்கம், வைரம் உள்ளிட்டவையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
 
மேலும் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் முடக்கிய வருமான வரித்துறை தற்போது சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களின் 15 வங்கி லாக்கர்களையும் சீல் வைத்து தனது அதிரடியை காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.