ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (11:30 IST)

சசிகலா வருகை எப்படி இருக்க வேண்டும்: விஸ்வாசிகளுக்கு டிடிவி அறிவுரை!!

சசிகலாவின் வருகையின் போது தொண்டர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என டிடிவி தினகரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

 
டிடிவி தினகரன் கூறியதாவது, சசிகலாவின் வருகையின் போது அம்மாவின் உண்மை தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போன்று அணிவகுத்து நிற்க வேண்டும். தமிழக எல்லையிலிருந்து அம்மா வீடு வந்து சேரும் வரை வழிநெடுகளிலும் வரவேற்கலாம்.
 
சசிகலாவை வரவேற்கும் போது கழகத்தினரால் யாருக்கும் இடையூறு ஏற்படக்கூடாது. சசிகலா வருகிறார் என்கிற போதே ரசாயன மாற்றம் நிகழ்வதை காண முடிகிறது. யார் தவறு செய்தவர்கள் யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள். 
 
தமிழ்நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம். அஇஅதிமுகவை மீட்டு எடுப்பதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். ஜனநாயக ரீதியாக போராடி மக்கள் ஆதரவை பெற்று வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.