உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – வெளியேறியது ஆஸ்திரேலியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியா இழந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் முன்னணியில் இருந்தன. ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸி பின்னடைவை சந்தித்தது. அதையடுத்து அந்த அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல இருந்த சுற்றுப்பயணத்தைக் கொரோனாவைக் காரணம் காட்டி ரத்து செய்ததால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
இப்போது நியுசிலாந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேதான் போட்டி உள்ளது.