Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள் - கதறும் திருநங்கை

Last Modified செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (17:18 IST)
தன்னை கருணைக் கொலை செய்து விடும்படி திருநங்கை ஒருவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தூத்துக்குடியை சேர்ந்த பொன்னுசாமி(29) என்பவர் கடந்த 2014ம் ஆண்டு பாலியல் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். தனது பெயரை ஷானவி என மாற்றிக்கொண்டார். மேலும், விமான நிலையத்தில் பணி புரிய விரும்பிய ஷானவி அதற்கான பயிற்சிகளை பெற்றார். சென்னை ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். 
 
அந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஏர் இந்தியா கேபின் க்ரீவ் பதவிக்கு வந்த விளம்பரத்தை கண்டு பெண்கள் பிரிவில் விண்ணப்பித்துள்ளார். அதன் பின்பு, பல அடுக்கு தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவர் திருநங்கை என்பதால் நிராகரிக்கப்பட்டது தெரிய வந்தது.
 
இதுபற்றி அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து, இதற்கு விளக்கம் அளிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், 4 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ஷானவி தன்னை கருணை கொலை செய்து விடுங்கள் என ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
 
இவரின் கடிதம் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :