திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (10:10 IST)

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள்… இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவை ரத்து!

பாம்பன் பாலத்தின் பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ள நிலையில் இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் பரமாரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் சென்ற போது சென்ஸார் பிரச்சனைகள் வந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.