சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் ஒரு மாதத்திற்கு போக்குவரத்து மாற்றம்! காவல்துறை அறிவிப்பு..!
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஒரு மாதத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள பல பகுதிகளில் தற்போது மழை நீர் வழிகால் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் சந்திப்பு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற உள்ளது.
இதனை அடுத்து நாளை முதல் ஒரு மாதத்திற்கு இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது நாளை முதல் அதாவது ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 26 ஆம் தேதி வரை இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்றும் வாகன ஓட்டிகள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாநகராட்சி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Edited by Mahendran