வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (11:20 IST)

பா.ஜனதாவுக்கு முஸ்லிம்கள் ஓட்டு தேவை இல்லை: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஈசுவரப்பா

பாஜகவுக்கு முஸ்லிம்களின் ஒரு ஓட்டு கூட தேவையில்லை என கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஈசுவரப்பா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஈசுவரப்பா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் 
 
அதில் அவர் பேசியபோது, ‘கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா என்ற தொகுதியில் 56,000 முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்களின் ஒரு ஓட்டு கூட பாஜகவுக்கு தேவையில்லை என்றும் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமலேயே பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கும் போது காங்கிரஸ் வேடிக்கை பார்க்கிறது என்றும் அந்த கட்சி இந்துக்களுக்கு உதவியாக வராது என்றும் இந்துக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே கட்சி பாஜக தான் என்றும் அவர் பேசினார்.
 
 எங்களுக்கு முஸ்லிம்களை வாக்குகள் தேவை இல்லை எங்களுக்கு வாக்களிப்பவர்கள் தேசிய பாதுகாவலர்கள் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் தேச துரோகிகள் என்றும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
 
 
Edited by Mahendran