அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு


sivalingam| Last Modified வெள்ளி, 3 நவம்பர் 2017 (18:49 IST)
சென்னையில் நேற்றிரவு விடிய விடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக இன்று நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.

 


இந்த நிலையில் இன்று ஓரளவுக்கு மழையின் அளவு குறைந்துள்ளதால் நாளை நடைபெறும் பல்கலைகழக தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இன்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதால் இன்றைய இரவு பெய்யும்  மழையை வைத்து நாளை தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :