திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (09:21 IST)

குறையாத தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Tomato
தக்காளி விலை கடந்த சில நாட்களாக விலை ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை நூறு ரூபாய்க்கு அதிகமாக விற்பனையாகி வருவதால் சில்லறை கடைகளில் 120 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
 
தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது என்பதால் தக்காளி விலை ஏற்றம் காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். உடனடியாக அரசு தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
Edited by Siva