வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஜூலை 2023 (08:55 IST)

விண்ணை முட்டும் தக்காளி விலை..! – இன்றைய விலை நிலவரம்!

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் தக்காளில் கடும் விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில் இன்று மேலும் விலை உயர்ந்துள்ளது.



வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு வழக்கத்தை விட குறைவாகவே தக்காளி வரத்து இருந்து வருகிறது. இதனால் தமிழக சந்தைகளில் தக்காளி விலை உயர்வை சந்தித்துள்ளது.

தக்காளில் கிலோ ரூ.100ஐ எட்டிய நிலையில் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ஆனாலும் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை ரூ.10 மேலும் அதிகரித்து கிலோ ரூ.130க்கு விற்பனையாகி வருகிறது.

சிறிய தக்காளில் ரகங்கள் கிலோ ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது. அரசின் பசுமை பண்ணைகள் மற்றும் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதால் அங்கும் மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது.

Edit by Prasanth.K