தொடர்புடைய செய்திகள்
- தக்காளியை பயன்படுத்தி சருமத்தை பளிச்சிட செய்ய உதவும் சில குறிப்புகள் !!
- தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை - மக்கள் மகிழ்ச்சி!
- தமிழக அரசின் பண்ணை பசுமை கடையில் ரூ.70க்கு தக்காளி!
- காஸ்ட்லில் கிப்டா கொடுக்கனும்... விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளி பரிசு!
- ரூ.10 குறைந்த தக்காளி விலை - மேலும் குறைய வாய்ப்பு!
கிலோ ரூ.40 - மார்கெட்டில் தக்காளி விலை மேலும் குறைந்தது!!
தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்தது.
இதனால் தக்காளி விலை தொடர்ந்து விலை உயர்ந்தது. வடமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர ஏனைய சில காய்கறிகளும் விலை உயர்ந்தது. தக்காளி வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120-ல் இருது ரூ.80 வரை கணிசமாக குறைந்த நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.80 வரை விற்ற நிலையில், இன்று கிலோ ரூ.40க்கு விற்பனை ஆகிறது. வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என தகவல்.
அடுத்த கட்டுரையில்
