செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 மார்ச் 2018 (14:08 IST)

ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை: மீண்டும் ஆஜரானார் விவேக்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் விவேக் ஆஜரானார்.  
 


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
 
அந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, அண்ணன் மகள் தீபா, மாதவன், டிரைவர் ஐயப்பன் உள்ளிடோரிடம் விசாரணை நடத்தியது.
 
இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் செல்ல பிள்ளையாக வளர்ந்த இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன்  விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த மாதம் 13-ந்தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.