Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா? சசிகலாவிடம் பொங்கிய விவேக்

Vivek
Last Updated: ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (17:59 IST)
விவேக்கிடம் இருந்த பொறுப்புகளை தினகரன் தட்டிப் பறித்து வருவதால், என் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா என்று விவேக் சசிகலாவிடம் பஞ்சாயத்து செய்துள்ளார்.

 
பெங்களூர் ஐடிசி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளவரசி மகன் விவேக் சசிகலா சிறைக்கு சென்ற பின் ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி என சிலவற்றை நிர்வாகிக்க தொடங்கினார். மேலும், சசிகலா சிறைக்கு சென்ற பின் அவரது குடும்பத்தினரிடையே போட்டி தொடங்கியுள்ளது.
 
தற்போது ஜெயா டிவி தினகரன் கட்டுபாட்டுக்குச் சென்றது. விவேக் பொறுப்பில் இருந்து ஒவ்வொன்றாக தினகரன் கைப்பற்றி வருகிறார். இதனால் விவேக் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் பஞ்சாயத்துக்கு சென்றுள்ளார். என்னை அழைத்து நிர்வாகத்தை கொடுத்துவிட்டு இப்போது அசிங்கப்படுத்துகிறீர்களே. என விசுவாசத்துக்கு இதுதான் பரிசா? என்று பொங்கியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :