Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: மாணவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

10th result" width="600" />
sivalingam| Last Modified வெள்ளி, 19 மே 2017 (05:00 IST)
இன்று காலை பத்து மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகவுள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அல்லது பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு அவரவர் தேர்வு முடிவு குறுஞ்செய்தியாக அனுப்பப்படவுள்ளது.


 


இன்று காலை தேர்வு முடிவு வெளியன பின்னர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்றும் முதல் வரும் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான மறுகூட்டலுக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 25-ம் தேதி முதல் மேற்கூறிய இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம். பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதில் நடைபெறவிருக்கிறது. இன்று தேர்வில் வெற்றி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்


இதில் மேலும் படிக்கவும் :