செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (13:33 IST)

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி.. மார்க் கிடையாது?? – பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மதிப்பெண்கள் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு போல இவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க திட்டமில்லை என்றும் அனைவருக்கும் தேர்ச்சி என்று மட்டும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.