தமிழகத்தில் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? – முதல்வர் ஆலோசனை தொடங்கியது!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் சமீபமாக கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் 11 மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. வரும் வாரத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.