1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (12:49 IST)

அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாதா??

அடுத்த 5 மாதங்களுக்கும் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என அதிகரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகிறது. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த ஜூன் மாதம் முதலாக ஆன்லைன் மூலம் பள்ளிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 7 ஆம் தேதி முதல் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்தது. 
 
பின்னர் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது.  ஆனால், தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பள்ளிகள் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது. 
 
இந்த நிலையில், அடுத்த 5 மாதங்களுக்கும் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை பள்ளிக்கல்வி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சம்பர் மாதம் வழக்கமாக நடத்தப்படும் அரையாண்டு தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.