வீட்டுப்பாடம் கிடையாது; புத்தகப்பை ஹெவிலோடும் கிடையாது! – மத்திய கல்வித்துறை!
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு வீட்டுப்பாட மற்றும் பள்ளி பை சுமையை குறைப்பது குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கை மூலம் அனைத்து மாணவர்களுக்கும் சீரான கல்வியை அளிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு அதிகபடியான வீட்டு பாடங்கள், அளவுக்கதிகமான புத்தக சுமை அளிக்கப்படுவது குறித்து மத்திய கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி தொடக்க நிலையில் வகுப்புகளான இரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிப்பதை தவிர்க்கலாம் என்றும், மேலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது சராசரி எடையில் 10% அளவு மட்டுமே புத்தக பையின் எடை இருக்குமளவு புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது உத்தரவாக இல்லாமல் அறிவுறுத்தல்களாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பள்ளிகள் இவற்றை பின்பற்றுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.