புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:37 IST)

வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை! – சுகாதாரத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் வழிபாட்டு தலங்கள் வார இறுதியில் செயல்பட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ள நிலையில் திரையரங்குகள், பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழிபாட்டு தலங்களும் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை ”கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்கள் செயல்பட தடை தொடரும். செப்டம்பர் 1 பள்ளி, கல்லூரிகள் திறந்த பின்னர் தொற்று குறைவாக இருக்கும்பட்சத்தில் கோவில்களை முழுவதுமாக திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.