1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (08:21 IST)

லிஸ்ட்டை ஒழுங்கா பாருங்க ஸ்டாலின்! தமிழக அரசு விளக்கம்!

பெரியார் விருது வழங்கபடாததை கண்டித்து முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ள நிலையில் ஏற்கனவே விருது பெறுபவர்கள் குறித்து அறிவித்துள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் கபிலர் விருது, கம்பர் விருது, அம்மா இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகள் இலக்கியத்தில், சமூக சேவையில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சமூக நீதிக்கான பெரியார் விருது, அம்பேத்கர் விருது ஆகியவையும் அடக்கம்!

இந்நிலையில் மேற்கண்ட விருதுகளுக்கான நபர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் பெரியார் விருது, அம்பேத்கர் விருதுக்கு பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து கேள்வியெழுப்பிய எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ”இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா?” என விமர்சிக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

தமிழக அரசு கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்த இரு விருதுகளுக்குமான நபர்களின் பெயரை வெளியிட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. பெரியார் விருது ‘செஞ்சி’ ராமச்சந்திரன் அவர்களுக்கும், அம்பேத்கர் விருது முனைவர் க அருச்சுனன் அவர்களுக்கும் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.