1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (09:59 IST)

பொங்கல் தொகுப்பில் பல்லி: புகார் கூறியவரின் மகள் தீக்குளித்து தற்கொலை!

பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக புகார் கூறியவரின் மகன் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருத்தணி சேர்ந்த குப்புசாமி என்பவர் என்பவரின் தந்தை நந்தன் என்பவர் பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனது தந்தை மீது வழக்கு பதிவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாக குப்புசாமி திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயங்களால ஆபத்தான நிலையில் இருந்த குப்புசாமி, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது