வாஜ்பாய் மறைவு : தமிழக அரசு நாளை விடுமுறை அறிவிப்பு
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து தமிழகக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணடைந்தார்.
அவரின் மறைவிற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவை சேர்ந்த அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதி சடங்கு நாளை மாலை டெல்லி விஜய்காட் பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அவரின் மறைவை அடுத்து தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.